குறட்டை இல்லாத தூக்கம்
தூக்கம் 8 மணி நேரம் . முறையாக துங்கினால் தான் அடுத்த நாள் சுறுசுறுப்பாக இருக்க வழி வகுக்கும் . எத்தனையோ குடும்பங்கள் குறட்டையால் பெரும் அவதிப்படுகின்றன, ஒருவர் விடும் குறட்டையால் மற்றவர்களுக்கு தான் அவஸ்தை. சிலர் குறட்டை விடும் அளவு அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. இது எதனால் வருகிறது, ஏதேனும் உடல் நலக் குறைவு இதனால் ஏற்படுமோ என்று பயந்து கொண்டு இருக்கிறார்கள்.
உடல்வாகு அதிகம் உள்ளவர்கள், குரல்வளையில் சதை வளர்ந்திருப்பவர்கள், தொற்று பாதிப்பு உள்ளவர்கள், மன அழுத்தம் மிக்கவர்களுக்கு எளிதாக வரும்.
குறட்டை ஆனது காற்று முச்சுகுழல் வழியே சென்று நுரையிரலை அடைகிறது அப்போது தொண்டையில் ஏற்படும் இடையுறு காரணமாக குறட்டை ஏற்படுகிறது.
குறட்டையை சில எளிதான பயிற்சிகள் மூலம் சரி செய்யலாம். இரவு துங்கும் முன் மூச்சுப் பயிற்சிகள் செய்தால் குறட்டையை முழுவதுமாக சரி செய்து விடலாம். தூங்கும் முன் தொண்டையை ஈ ரப்படுத்திக் கொள்ளவும், மற்றும் தலையணை சுத்தமாக வைத்துக் கொண்டால் குறட்டையை குறைத்து விடலாம்.
நாம் தூங்கும் அறையை முழுவதுமாக சுத்தமாக வைத்துக் கொண்டாலே அணைத்து நோய்களும் தடுக்கப்பட்டு விடும்.
No comments:
Post a Comment